Youtube link

தேவர் குலம் காக்க வந்த காவலன் !
அசுரர்களை வதமுடித்த நாயகன் !
மூவுலகின் முதற்கடவுள் மோகனன் !
மூஷிகம் மேல் வலம்வரு(ம்) விநாயகன் !

(தேவர் குலம் காக்க வந்த காவலன் !)

தோப்புக்கர்ணம் போடச் சொல்லி…தேவர்கட்கு தொல்லை தந்து…
களியாட்டம் ஆடி வந்தான் கஜமுகாசுரன் !

களியாட்டம் ஆடியவன் கதை முடித்து அவனை ஒருஎலியாட்டம் ஆக்கியவன் ஸ்ரீ கஜானனன் !

(தேவர் குலம் காக்க வந்த காவலன் !)

அனல் உமிழ்ந்து பேசிப் பேசி, அனைவரையும் நடுங்கவைத்து
அளவில்லாத‌ துன்பம் தந்தான் அனலாசுரனே !

அனல் உமிழும் அசுரனையே விழுங்கி அந்த அனல் குளிர‌
அருகம் புல்லை உண்டவனாம் ஸ்ரீ கஜானனன் !

(தேவர் குலம் காக்க வந்த காவலன் !)