மஹா சிவராத்திரி – 2019

பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன்
பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே !
பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன்
பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !

நிர்வாண ஷட்கம்

“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……

லிங்காஷ்டகம்

பிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும்
நிர்மலமானதோர் நிர்குண‌ லிங்கம் !
ஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் !
பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் !