Youtube link

இன்னிசை பாடி மனம் மயக்கும் கண்ணனவன் குழலே ! – எங்கள்
சாயி நாதன் நாமம் சொல்லி கீதம் பாடுவாய் ! (2)

தென்றல் கூத்தாடும் பூந்தோட்டமே ! (2)
பாபா புகழ் பாடுவாய் !
பாபா புகழ் பாடுவாய் !

கார் மேகமே …புது நீர் கொண்டு வா ! – அந்த‌
நீரால் சாய் பதங்கள் அதை நீராட்டவா…! (2)

சரணம் – 1
—————–

தாயாகினான்… நம் குருவாகினான்… – சிவ‌
வடிவாய்…தவ உருவாய் நமைக் காப்பாற்றுவான் ! (2)

துனியை எரிக்கின்றவன்…! துணையாய் இருக்கின்றவன்…! (2)

புவி ஆளும் பரந்தாமன்…எங்கள் சாயி தெய்வமே ! (2)

நாடு அவன் பாதம் நாடு ! பாபா புகழ் பாடிடு…!

(இன்னிசை பாடி)

சரணம் – 2
——————-

காற்றாகினான்…நீர் ஊற்றாகினான்… – நறு
மலராய்…மழை முகிலாய் நமை சூழ்கின்றவன்…! (2)

எல்லாம் என்றானவன்…! எங்கும் ஒன்றானவன் ! (2)

கலி தீர்க்கும் ரகுராமன்…! ..எங்கள் சாயி தெய்வமே ! (2)

நாடு அவன் பாதம் நாடு ! பாபா புகழ் பாடிடு…!

(இன்னிசை பாடி)