பாடலை பார்க்க/கேட்க‌<---

பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் ! (2)

எம் அம்மா நீயே !
பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் ! (2)

பாதச் சலங்கைகள் கிண்கிண் என்றிட…
பைய பையவே பூவடி வைத்து…
தயிரைக் கடைய வரும் வெண்ணை போலே
சான்றோர் பூஜை ஏற்றிட வரணும்…!

பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

எம் அம்மா நீயே !
பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

கோடி சூரியன் ஒளிமயம் போல..
ஜொலித்திடும் தேவி ! ஜனகனின் மகளே !
கனகமும். செல்வமும் மழையெனப் பொழிய…
மனது விரும்பும் வரம் அருளிட வருவாய் !

பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

எம் அம்மா நீயே !
பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

கற்றவர், நல்லவர் திருவுளம் தன்னில்…
எப்பொழுதும் நீ ஆலயம் கொள்வாய் !
நித்திய பூஜை புனஸ்காரங்கள்..
ஏற்று அருளிட நீ வர வேணும்…!

பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

எம் அம்மா நீயே !
பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

வேங்கட ரமணன் மனம்கவர் ராணி !
குங்குமம் சூடும், தாமரை மேனி…!
ஈடிலா செல்வம் அருளிட வேணும்…
பாடிடும் வளைஒலி சூடிய கரத்தால்…

பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

எம் அம்மா நீயே !
பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

சுக்கிர வார பூஜையின் போது…
சர்க்கரை, நெய்யும் ஓடையாய் ஓட…
தேவர்கள் மனம் உறை தேவியே வருவாய் !
புரந்தர விட்டலன் துணைவியே வருவாய் !

பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !

எம் அம்மா நீயே !
பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் !