பாடலை பார்க்க/கேட்க‌<---

சந்திரசேகரா ! சாம்பசிவா !
சுப்ரபாதமே எழுந்தருள்வாய் !
சந்திரசேகரா ! சதாசிவா !
சுப்ரபாதமே எழுந்தருள்வாய் ! (2)

வேதமும் கீதமும் முழங்கிடவே…
மேளமும் தாளமும் ஒலித்திடவே…
திருப்பள்ளி எழுவாயே குருநாதா ! (2)

சர்வேசா ! சங்கரா !
எழுவாயே ! அருள்வாயே !

காஞ்சி மாமுனி எழுந்தருள்வாய் !
காலை புலர்ந்தது எழுந்தருள்வாய் !
கதிரவன் உந்தன் ஒளிவாங்க…
காத்து நிற்கிறான் எழுந்தருள்வாய் ! (2)

பாடும் பறவைகள் ‘கீச்’சிடவே..
பூவையர் மாலைகள் கோர்த்திடவே…
திருப்பள்ளி எழுவாயே ! குருநாதா ! (2)

சர்வேசா ! சங்கரா !
எழுவாயே ! அருள்வாயே !

அல்லி தாமரை மலர்ந்ததுவே !
வாசம் காற்றினில் கலந்திடவே !
மெல்லிசை எங்கும் கேட்கிறதே…
மேன்மை தந்திட எழுந்தருள்வாய் !

தேவர்கள் பூமழை சொரிந்திடவே !
தாமரை திருமுகம் காட்டிடவே !
திருப்பள்ளி எழுவாயே ! குருநாதா ! (2)

சர்வேசா ! சங்கரா !
எழுவாயே ! அருள்வாயே !

காசி சங்கரா எழுந்தருள்வாய் !
காஞ்சி பெரியவா எழுந்தருள்வாய் !
காவி ஸ்ரீசிவா எழுந்தருள்வாய் !
காக்க வேணுமே எழுந்தருள்வாய் ! (2)

கூடினர் பக்தர்கள் கூட்டமுடன்.
நாடியே வந்தனர் நாட்டமுடன்..
திருப்பள்ளி எழுவாயே ! குருநாதா ! (2)

சர்வேசா ! சங்கரா !
எழுவாயே ! அருள்வாயே !

காம கோடியின் குருநாதா !
யோக மளித்திடும் குருதேவா !
வேத மகிமைகள் சொல்லியவா !
பாதம் பணிகிறோம் எழுந்தருள்வாய் !

ஆயிரம் ஆயிரம் தேவர்களும்…
ஆடியே வந்தனர் அருள்பெறவே !
திருப்பள்ளி எழுவாயே ! குருநாதா ! (2)

சர்வேசா ! சங்கரா !
எழுவாயே ! அருள்வாயே !

ஞான ஜோதியே ! எழுந்தருள்வாய் !
ஞால தீபமே ! எழுந்தருள்வாய் !
மோன ராஜனே ! எழுந்தருள்வாய் !
தான ரூபனே ! எழுந்தருள்வாய் !

கூடிய பக்தரின் குறைகளைக் கேட்டிடவே !
தீர்வென அருட்கரம் காட்டிடவே !

திருப்பள்ளி எழுவாயே ! குருநாதா ! (2)

சர்வேசா ! சங்கரா !
எழுவாயே ! அருள்வாயே !

சந்தனம் பன்னீர் ஜவ்வாதும்…
மங்கல மாக மணக்கிறதே !
நந்தவனமாய் சன்னதியில்
நாங்கள் கூடினோம் எழுந்தருள்வாய் !

ஏழையர் தனவான் எல்லாரும்…
ஆவலாய் ஒன்றென நிற்கின்றார்

திருப்பள்ளி எழுவாயே ! குருநாதா ! (2)

சர்வேசா ! சங்கரா !
எழுவாயே ! அருள்வாயே !

தெய்வக் குரலை யாம் கேட்டிடவே..
உய்யும் வழியை யாம் அறிந்திடவே…
கைகள் தூக்கி எமைக் காத்திடவே !
கருணை சீலனே ! எழுந்தருள்வாய் !

பேரருள் பொழிந்திடும் கார்முகிலே !
காரிருள் நீக்கிடும் பேரொளியே !
திருப்பள்ளி எழுவாயே ! குருநாதா ! (2)

சர்வேசா ! சங்கரா !
எழுவாயே ! அருள்வாயே !