பிள்ளையார்

சங்கடஹர சதுர்த்தி

மங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி ! சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி ! (2) தேய்பிறை சதுர்த்தியில் தேவனைத் தொழுவதால்… வளர்பிறை ஆகுமே வாழ்வில் என்றுமே ! கோரஸ்: சங்கடம் தீர்க்கும் சதுர்த்தியின் திருநாள் ! சங்கட நாசன கணபதி திருநாள் ! சரணம் -1 —————— சந்திரன் தவமிருந்து… மங்கள கணபதியின் வரங்களை தீர்க்கமாய் பெற்றதும் இந்நாளே ! (2) அங்காரகன் அவனும் கிரகப் பதவியோடு… மங்கலன் எனும் பெயரும் பெற்றதும் இந்நாளே ! (2) கோரஸ்: சங்கடம் தீர்க்கும் சதுர்த்தியின் திருநாள் ! சங்கட நாசன கணபதி திருநாள் ! சரணம் – 2 ———————