ஷீரடி சாய்பாபா

சாயி தீபாவளி !

ஆயர் பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ——————————————– சாயி நாதன் திருவுருவாய் தீப ஒளி நாளிதனில் மாயக் கண்ணன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவன் தான் மனிதனாக மண்ணில் வந்த பண்டரியின் பாண்டுரங்கன்.. வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! (சாயி நாதன்) சாயிராமின் பொன்மொழிகள் தேன்இனிப்பு பண்டங்கள்போல்… நம்பி அதன் வழி நடப்போம் வாருங்கள் ! (2) அவன் நாமமெனும் இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் உறவுகளே நட்புகளே. வாருங்கள்..(2) (சாயி நாதன்) தீய்மைமிகு எண்ணங்களின் மன அழுக்கு ஆடையினை… சாய் துவைப்பான் களைந்திடலாம் வாருங்கள்! (2) புது ஆடையினைச் சூடிக்கொண்டு சாயி என்று

கோதுமையில் மாவரைத்து...

கோதுமையில் மாவரைத்து.. கொடியதோர் நோய் தீர்த்த… சத்குரு திருவடியை நாடு ! மண்ணில் வந்த தெய்வமென ஷீரடியில் வாழும்… மன்னவன் சாயிபாபா நாமமதைப் பாடு ! (கோதுமையில் மாவரைத்து) வெற்றிப் பயிர் செழிக்க…பக்தியதே விதையாகும்,,, பற்றிடு குருபதத்தை சத்தியமாக…! (வெற்றிப் பயிர்) சக்தியினைத் தந்தருளும்…சாயி..பரம சிவம்… இத்தரையில் வந்தது நாம் செய்த தவம்… (கோதுமையில் மாவரைத்து) பக்தர்கள் நினைப்பதெல்லாம்….முன்பாகவே அறிந்து… தானாய் கேட்டருளும் மகான் சாயிதான் ! அற்புதங்கள் செய்யவந்த…ஹரியின் அவதாரம் ! கற்பகமாய் வரமருளும்…கருணைத் திருவுள்ளம் ! (கோதுமையில் மாவரைத்து)

சாய்பாபா உதி

மெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் மருந்தாகுது ! (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது…! (சாய்பாபா) விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… எந்நாளும் நன்னாளென வாழ்வோமே…! சாய்ராமன் அருளாலே ! (சாய்பாபா) கதி என்று வந்தால் கரை சேரச் செய்வான் ! கதி என்று வந்தால் கரை சேரச் செய்யும்… ஷீரடி வாசன் அருளியது… ஷீரடி வாசன் அருளியது… சாய்ராமின் உதி வந்தது…நம் வாழ்வில்

வலி தீர்க்க வரவேண்டும் !

வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என்

வலி தீர்க்க வரவேண்டுமே !

கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல்

வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !

சாயி லீலா !

கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !

கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !

சாயி லீலா…குரு சாயி லீலா !

ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல‌

ஓராயிரம் லீலை !

சாய் ஊர்வலம் !

மாவிலை… தோரணம்…வீதி எங்கும் ஆடிடும் !

பூவினைத் தூவியே மேகம் வாழ்த்துப் பாடிடும் !

பாரினை ஆளும் ஷீரடி ராஜன்…

ஊர்வலம் வந்தான் !

"சாயி' என்றழைத்திடு

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி’ என்றழைத்திடு ஷீரடியின் நாதனை ! சாய்ந்திடுமே வேரடியாய் சூழுகின்ற வேதனை ! தாயின் மனம், தண்மை குணம் கொண்ட அந்த தேவனின்… தாள் பணிந்து தண்டனிட தீண்டிடுமோ தீவினை ! (“சாயி’ என்றழைத்திடு ) ஆறுதலை அருளுகின்ற ஆண்டவனாம் சாயிராம் ! ஏழுலகம் ஆளுகின்ற வேந்தனவன் சாயிராம் ! எட்டு திக்கும் எதிரொலிக்கும் மந்திரமும் சாயிராம் ! ஏற்றம் தரும் வாழ்வளிப்பான் எங்கள்குரு சாயிராம் ! (“சாயி’ என்றழைத்திடு ) ஒன்பது நாள் வியாழனிலே நோன்பிருந்து வேண்டினால்… வேண்டியதைத் தந்திடுவான் வள்ளல்

எல்லாம் வல்ல‌ சிவனே !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– எல்லாம் வல்ல‌ சிவனே !…சிவனின் ரூபம் அவனே ! ​ஸ்ரீஜெயராமனும் அவனே ! கண்ணன் ஹரிமாதவனே ! ஜெய் ஜெய் சாயி பாபா ! – உன் பெயர் சொல்லி அழைத்தோம் வா! வா ! உன் அருட் பார்வை தா ! தா ! உன் அருட் பார்வை தா ! தா ! // துவாரகமாயி ! ஸ்ரீ ஜெய சாயி ! கருணை கற்பகமே ! அனல் உரு ஜோதி ! சத்குரு சாயி ! கலியுக அற்புதமே ! //