சாய் ராம நவமி !

தசரத ராம நவமி…ஷீரடி சாயி பவனி..!மத பேதமின்றி கூடி..மகிழ்ச்சியில் திளைக்குது பூமி !

சாயி பாபா என்று சொன்னால்

சாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்

சன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…

வலி தீர்க்க வரவேண்டும் !

வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என்

வலி தீர்க்க வரவேண்டுமே !

கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல்

வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !