விஜய லட்சுமி
———————-

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே !
விஜய பலதாய தீமஹே !
தன்னோ விஜயலட்சுமி ப்ரசோதயாத் !
****************************

பல்லவி

கமலம் ஏறிய செங் கமலம் !
கீதம் பாடியே அழைக்கின்றோம் !…. நீ வரணும் ! (2)

வெற்றி அளிக்கும் விஜய லட்சுமி ! (2)
தொட்ட செயல் துலங்கிடும் வரம் கொடுப்பாயே ! (2)

ஜெய ஜெய தேவி ! ஜெயமருள் தேவி !
அபயம் அபயம் ! அம்பிகை வாணி !
வெற்றிக் கனி கொண்டு தந்திடுவாயே !
விஜய லட்சுமியே நீ சரணம் ! (2)

(கமலம் ஏறிய செங் கமலம் !)

சரணம் – 1

பாண்டவர் படையோடு நாரணன் கண்ணனும்
போரினில் வென்றதும் தேவி உன் திருவருளே ! (2)

ஆண்டவன் ஸ்ரீராமன் ராவணன் வதம்செய்ய
அருள்மழை பொழிந்ததும் உன்கண்களே ! (2)

அருள்மழை பொழிவதும் உன்கண்களே !

ஜெய ஜெய தேவி ! ஜெயமருள் தேவி !
அபயம் அபயம் ! அம்பிகை வாணி !
வெற்றிக் கனி கொண்டு தந்திடுவாயே !
விஜய லட்சுமியே நீ சரணம் !

(கமலம் ஏறிய செங் கமலம் !)

சரணம் – 2

பாதையில் எதிர்காணும் பாதகத் தடையாவும்
நெஞ்சினில் துணிவோடு கடந்திடச் செய்திடுவாய் ! (2)

கோதையே ! உன்பாதம்…என்றுமே மறவேனே !
கோல விழியாளே ! ஜெயமாகட்டும் ! (2)

கோல விழியாளே ! ஜெயமாகட்டும் !

ஜெய ஜெய தேவி ! ஜெயமருள் தேவி !
அபயம் அபயம் ! அம்பிகை வாணி !
வெற்றிக் கனி கொண்டு தந்திடுவாயே !
விஜய லட்சுமியே நீ சரணம் !

(கமலம் ஏறிய செங் கமலம் !)