வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா !

பல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா ! சந்திர சேகரா ! தயாபரா ! (வேதமே உலகின் ஆதாரம்) சரணம் – 1 நூல்கொண்டு படித்து அறிவது அல்லவே…! வாய்மொழி சொல் கேட்டு அறிவதே வேதம் ! ப்ரபஞ்சம் முழுவதும்…வேதத்தின் த்வனி பரவ… சகல சௌபாக்யம் வரும் என்றருள் மலர்ந்தாய் ! சங்கரா ! சங்கரா ! சங்கரா ! சங்கரா ! (வேதமே உலகின்) (வேதமே) சரணம் -2 ஞானத்தை வளர்க்கும் அமுதமே வேதமாம் ! ஞாலத்தில் ஒலித்திருக்கும் என்றுமே நாதமாய் ! வேதமே ஓதாத…ஆலயம் தன்னில்… தேவன் வாழ்வதில்லை…!

பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே !

காலடி தொடங்கி… பாரதம் முழுவதும் காலடியாய் நீ சென்றது,,, பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே ! (காலடி தொடங்கி) சரணம் – 1 காவியில் நீயும் நடப்பதைக் கண்டு சூரியனும் வழி விலகிடுமே ! வானமும் காவியைச் சூடிக்கொண்டு செவ்வானமாய் மாறிடுமே ! பரம ஆச்சர்யமே ! பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே ! (காலடி தொடங்கி) சரணம் -2 பல்லக்கில் உன்னைத் தாங்கிடும் பாக்கியம் கிட்டுமோ என பலர் காத்திருக்க… பாதமே போதும் என நடந்தாய்… ஹர ஹர சங்கர கோஷமுடன்… பரம ஆச்சர்யமே ! பரம ஆச்சர்யமே

லட்சுமி ராவே மா - தமிழாக்கம்

பாடலை பார்க்க/கேட்க‌<— லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! – வர‌ லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு… பாற்…க….டல் திரு மகளே ! வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு..! (2) சுந்தர தேவி ! உந்தன் பூ முகம்.. சந்திரன் போலே ஒளிர்கிறதே ! (2) மோட்சம் அருளும் சௌந்திர‌தேவி ! ப்ருந்தா வனம்உறை லட்சுமியே வா வா! (2) லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! பாற்…க….டல் திரு மகளே ! வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு….! குங்குமமும் மஞ்சளும்கூட‌ கோரிக்கை வைத்தோம் அன்போடு ! (2) ஜாதிப் பூவும் கோரோஜனமும் படைத்தோம் அம்மா பாங்கோடு !

சந்திரசேகரேந்திர சரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி

பெரியவா நாமாவளி-க்கான தமிழ் பொருள் (பெரியவா 108 போற்றி) இங்கே பதிவு செய்துள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்தம் செய்து கொள்கிறேன்

ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி

கோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய்
என்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது.

இதோ ஞான சூரியன் !

அதோ மேக ஊர்வலம் திரை இசை மெட்டில் ———————————————- இதோ ஞான சூரியன்..! இதோ மோன சந்திரன்..! இங்கே ! இதோ காஞ்சி நாயகன்…! இதோ காசி சங்கரன்…! இங்கே ! கண்ணோடு..கருணையின் கடல் பார்த்தேன்..! நெஞ்சோடு…அமைதியின் அலை பூத்தேன்…நான்..நான். (இதோ ஞான சூரியன்) கமல பாதம் நடையினில் கனிந்து போகும் ! நிமல ரூபம் அதில்தடை தணிந்து போகும் ! வேதம் சொன்ன பாதையே மார்க்க மாகுமே ! வாழ்த்து அருள வாழ்க்கையே தீர்க்க மாகுமே ! கயிலை நாதன் ஈசனை..கண்ணில் கண்ட பாக்கியம்…! காண நானும் நேர்ந்தது பூர்வ ஜென்ம புண்ணியம்…! (இதோ ஞான சூரியன்)