சாயி தர்பார்

துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே
சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2)
ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும்
ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2)

கற்பகத்தானைக் கேளுங்க !

நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க?
வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க?

ஜெய தன்வந்திரி ! ஓம் !

மருத்துவ ராஜ்ஜியத்தின் முதன் மந்திரி !
மருத்துவ ராஜனாம் தன்வந்திரி !
வருத்திடும் நோய் தீர்க்கும் அரியநெறி !
வகுத்திட வந்தான் நாராயண ஹரி !

விஸ்வரூப தரிசனம்

விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் !
காண வேண்டும் இக்கணம் !
காட்சியாவ தெக்கணம்?

வில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…

சிவபெருமானுக்கு உகந்ததாகவும், சிறந்ததாகவும் கருதப்படும் வில்வ இலையின் பெருமையை சொல்லும் ஸ்லோகம்

அகவல் சொன்னால்…

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத்
தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே !
அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌
சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !