நவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்
ஞானம் என்னும் விளக்கேற்றி
அஞ்ஞான இருளை நீக்கி…
ஞாலம் எல்லாம் ஒளி தருவாள்
மோன நிலைவாழ் வித்யா லட்சுமி !
பாட்டு தயாரிக்கும் இடம் !
ஞானம் என்னும் விளக்கேற்றி
அஞ்ஞான இருளை நீக்கி…
ஞாலம் எல்லாம் ஒளி தருவாள்
மோன நிலைவாழ் வித்யா லட்சுமி !
கமலம் ஏறிய செங் கமலம் !
கீதம் பாடியே அழைக்கின்றோம் !…. நீ வரணும் !
வந்தனம் சொல்லுங்கடி !
சந்ததி வாழுமடி !
சந்தான லட்சுமியவள் நாமம் பாடியே !
வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !
வாரணம் சூழவே… வருகவே ! வருகவே ! (2)
பவபய ஹாரிணி !
மதுசூதன் மோகினி !
நவமணி சூடிடும்!
ஸ்ரீ பவ தாரிணி ! (2)
வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி
நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2)
நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன்
உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !
கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !
தனமும் வளமும் தரும் தேவி நாராயணி !
வைகறையது வையகத்தில்…
வந்தது யாரால் உன்னாலே !
தாமரைப் பூவில் உறைபவளே !
நான்மறை தொழும் ஆதி லட்சுமி !